அமைச்சர் உதயநிதியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் வசந்த்
கைதட்டி தொண்டர்கள் உற்சாகம்
தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் உதயநிதியுடன் குமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவிலில் பரப்புரையாற்றினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக்களையும் நோக்கி உதயநிதி ஸ்டாலின் கையசைத்துக் கொண்டிருந்த போது, திடீரென வேட்பாளர் விஜய் வசந்த் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இதனை அங்கிருந்த தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அமைச்சர் உதயநிதி பேசும் போது, விஜய் வசந்தை தனது நெருங்கிய நண்பர் என கூறினார்.