பாஜக தலைவர் அண்ணாமலை மேல் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் கோபம்
“பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை
ஏன் எங்களுக்கு பேட்டி கொடுக்கத் தெரியாதா? அதனால் என்ன பயன்?”
பாஜகவில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார்.
பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டி கொடுத்தே மக்களை இழுக்கப் பார்க்கிறார். டெக்னிக் ஆக அடிக்கடி பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார் ஏன் எங்களுக்கு பேட்டி கொடுக்கத் தெரியாதா? என்றார் ஆவேசமாக.