தேனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“ஒரே நாடு ஒரே தேர்தல்னு பாஜக சொல்லுது, அதுபடி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கும் என இலவு காத்த கிழியாக எடப்பாடி பழனிசாமி காத்துக்கிடந்தார்
அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லா தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் பழனிசாமி அவர்களே, அடுத்த தேர்தலிலும் திமுக வெல்லும். இப்போது உங்களிடம் இருக்கும் தொகுதியையும் திமுக வெல்லும்.
அதிமுகவை அழிப்பவர்கள் அழிந்துபோவார்கள் என சவுடால் விடுகிறார். வெளியே இருந்து யாரும் வரத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் என நீங்களே அழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்”
“ஊழலுக்கு யூனிவர்சிட்டி கட்டி, வேந்தரா ஒருத்தரை நியமிக்கணும்னா அதற்கு பொருத்தமானவர் மோடிதான்”.