விஷ்ணு விஷால் போட்ட ட்வீட்.. பதிலுக்கு சூரி செய்த செயல்.. வைரலாகும் பதிவு
கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே நிலவி வந்த நில மோசடி தொடர்பான பிரச்னைக்கு தற்போது இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்..
‘வெண்ணிலா கபடி’ குழு படத்தில் தொடங்கி ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ வரை பல்வேறு படங்களில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, சென்னை சிறுசேரியில் நிலம் வாங்கியது தொடர்பாக, ஓய்வு பெற்ற டிஜிபியும், விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி மோசடி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது, சூரி மற்றும் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்.
மேலும், இருவரும் சேர்ந்து படம் நடிப்பதையும் தவிர்த்தனர். இந்நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக, நடிகர் சூரி, மற்றும் தனது தந்தை குடவாலா உடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார். அதில், அனைவருக்கும், அனைத்திற்கும் காலம் தான் பதில் என்றும், நேர்மறை எண்ணங்களை பரப்புவோம் சூரி அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.