ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது. நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது. ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது. சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.