பனிப்புயல்
தாக்கப்போகிறதா பனிப்புயல்? அதிர்ச்சியளிக்கும் வானிலை மாற்றங்கள்… நடக்கப்போவது என்ன?
தி கார்டியன் அறிக்கையின்படி, வளைகுடா நீரோடை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து நூற்றுக்கணக்கான அடிக்கு கீழே இருந்து மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு பயணிக்கிறது.
பூமியில் கடைசி பனியுகம் (ice age) சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது, இந்த பனியுகம் மிக விரைவில் தொடங்கலாம் என்ற நிலை உருவாகி இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது நடந்தால், கடல்களில் பல இடங்களில் தண்ணீர் உறைந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளும் பனி போர்வையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இது எப்படி நடக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து பனிப்பாறைகளும் உருகுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா உட்பட ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பருவமழைகளை வலுப்படுத்தும் வளைகுடா நீரோடை நீரோட்டமும் இதன் காரணமாக பலவீனமாகிவிட்டது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் 2025ல் இருந்து சரியத் தொடங்கும் எனவும் கணித்துள்ளனர்.
இந்த நீரோடை அழிந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும். இதன் காரணமாக வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் குறையலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் பனி யுகத்திற்கு வழிவகுக்கும்.
வளைகுடா நீரோடை என்பது வடக்கு அட்லாண்டிக் பிராந்தியத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்தும் மெக்சிகோ வளைகுடாவிலிருந்து உருவாகும் ஒரு சக்திவாய்ந்த கடல் நீரோட்டமாகும். அதன் வெதுவெதுப்பான நீர் ஒரு இயற்கை கன்வேயர் பெல்ட்டாக செயல்படுகிறது. பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கி வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் வானிலை மாறுகிறது.
இந்த நீரோடை நின்றால், பனிப் புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மழையில் கடுமையான இடையூறு ஏற்படும். இது பயிர் சுழற்சியை கெடுக்கும். பஞ்ச நிலையும் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் கடல் மட்டத்தில் விரைவான உயர்வு இருக்கும், இது நகரங்களை மூழ்கடிக்கும். சுறுக்கமாகச் சொன்னால், 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி டே ஆஃப்டர் டுமாரோ’ படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் போல் இது இருக்கும்.
தி கார்டியன் அறிக்கையின்படி, வளைகுடா நீரோடை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து நூற்றுக்கணக்கான அடிக்கு கீழே இருந்து மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு பயணிக்கிறது. கண்ணுக்குத் தெரியாத அவ்வளவு பெரிய நதி இது. 2025 மற்றும் 2095-க்குள் வளைகுடா நீரோடை முற்றிலும் அழிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.