நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது:
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார்.