காலை உணவுக்கு அவல் உப்புமா.. இந்த ரெசிபியை டிரை பண்ணி பாருங்க

காலையில் எழுந்ததும் விரைவாக என்ன டிபன் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பவர்களா நீங்கள்..? அப்படி என்றால் இந்த ரெசிபி பதிவு உங்களுக்குதான்.

இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியில் அவலை கொண்டு சுவையான உப்புமாவை காலை நேரத்தில் விரைவாக எப்படி செய்யலாம் என்று தான். வாங்க பார்க்கலாம்…

தேவையான பொருட்கள் :

  • கெட்டி அவல் – 2 கப்
  • பச்சை பட்டாணி – 1/2 கப்
  • பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 1 கப்
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4
  • நறுக்கிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
  • வேர்க்கடலை – 1/4 கப்
  • எலுமிச்சை பழ சாறு – 1
  • மஞ்சள் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன்
  • கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கெட்டியான அவலை கழுவி ஒரு நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தண்ணீர் முழுவதையும் வடித்து தனியே வைக்கவும்.

குறிப்பு : அவல் கஞ்சி போல் நனைந்து கெட்டியாகிவிடும் என்பதால் அதிக நேரம் ஊற வைக்க கூடாது.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேர்க்கடலையை போட்டு இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்து ஒரு தட்டில் மாற்றி ஆற விடவும்.

பிறகு அதே எண்ணெயில் கடுகு மற்றும் சீரகம் போட்டு கொள்ளுங்கள்.

கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அடுப்பின் தீயை குறைத்து சுமார் 6 நிமிடங்களுக்கு கடாயை மூடி சமைக்கவும்.

உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி மென்மையாக வந்ததும் ஊறவைத்து வடிகட்டிய அவலை சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இறுதியாக வறுத்த வேர்க்கடலை, எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அவல் உப்புமா சூடாக பரிமாற ரெடி.

Leave a Reply

Your email address will not be published.