ஒரு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது
ஒரு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது.. எந்த தேவைகளுக்காகவும் இப்பகுதி மக்கள் வெளியே செல்வதில்லை.. ஏன் தெரியுமா
அலஸ்கா அமெரிக்காவின் வடகோடி மாநிலமாகும். இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும்.
அமெரிக்காவில் உள்ள ஒரு மாகானத்தில் முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. உண்மை தான். இவர்கள் இப்படி ஒட்டுமொத்த ஒரே குடியிருப்பில் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
அலஸ்கா அமெரிக்காவின் வடகோடி மாநிலமாகும். இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். இங்கு விட்டர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வரவேண்டும் என்றால் கடல் வழியாக மட்டுமே பயணம் செய்ய முடியும்.
இந்த நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழ்கின்றனர். இது அதிக குளிரான பகுதி என்பதால் பொதுமக்களால் அடிக்கடி வெளியே சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர்.