ஒரு கப் நூடுல்ஸில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது தெரியுமா

நாம் சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளுமே நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இயற்கை சர்க்கரை ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் ( நீரிழிவு நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும்) செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

அதிலும் எக்கச்சக்கமாக சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பேக்கேஜ் உணவுகளை ஒருவர் சாப்பிடும் பொழுது கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இது போன்ற செயற்கை வடிவில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை நமது ரத்த சர்க்கரை அளவுகளை நேரடியாக பாதிக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள், உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அந்த வகையில் நாம் அடிக்கடி விரும்பி சாப்பிடக்கூடிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எவ்வளவு சர்க்கரை அளவை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நூடுல்ஸில் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து இருக்கிறது. எனினும் அதில் நமது ரத்த சர்க்கரை அளவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரையும் காணப்படுகிறது. ஒரு கப் நூடுல்ஸில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்பது அதன் பிராண்ட் மற்றும் சுவையின் அடிப்படையில் அமையும். பொதுவாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் அதிக அளவு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை காணப்படுகிறது.

ஆகவே நீரழிவு நோயாளிகள் நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயமாக நீரிழிவு நோய் நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம். நிலையான ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பதற்கு நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசிமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் முழு தானிய நூடுல்ஸ் அல்லது பருப்புகளால் ஆன நூடுல்ஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

இவற்றில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு குறைந்த கிளைசிமிக் எண்ணை கொண்டுள்ளன. இந்த நூடுல்ஸ் செரிமான செயல் முறையை மெதுவாக எதிர்கொள்கிறது. இதனால் ரத்தத்தில் குளுக்கோஸ் பொறுமையாக வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.