20 நிபந்தனைகள் விதித்த தேர்தல் ஆணையம்.
நாளை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு 20 நிபந்தனைகள் விதித்த தேர்தல் ஆணையம்.
தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை பொதுமக்கள் கொண்டு வர அனுமதியில்லை.
மரத்தால் ஆன கைப்பிடியுடன் கூடிய பதாகைகளை பொதுமக்கள் எடுத்து வரக்கூடாது.
பிரதமர் மோடி பயணிக்கும் பாதையில் அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது.
மத நம்பிக்கைக்கு எதிரான, வெறுப்பு கருத்துகளுடன் முழக்கமிடக் கூடாது.