லக்னோ அபார வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ அபார வெற்றி. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். டி காக் 6 ரன், படிக்கல் 7 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
ராகுல் 33 ரன் (31 பந்து, 3 பவுண்டரி), ஸ்டாய்னிஸ் 58 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நல்கண்டே பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப ஆயுஷ் பதோனி 20 ரன்னில் (11 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. நிகோலஸ் பூரன் 32 ரன், க்ருணால் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் உமேஷ், நல்கண்டே தலா 2, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.