மும்பை பங்குச்சந்தை
: சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகம்
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மாருதி சுசூகி, எம்&எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்கிஸ் வங்கி, டிசிஎஸ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகள் அதிகரித்து 22,678 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.