மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
கிருஷ்ணகிரி
ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.30.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் 500 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் ஒசூர் மாவட்ட ஆட்சியர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன
சென்னை
பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.
திருச்சி கிராப்பட்டியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 5ம் தேதி இரவு சோதனை தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை சோதனை நிறைவு பெற்றது.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடத்த 67 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை
நொச்சிகுளம் கலையரங்கம் அருகில் அன்பு (32) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த அன்புவின் உடலைக் கைப்பற்றி சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் நின்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிகள் உட்பட 30 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 67 கிலோ பறிமுதல் தங்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் உள்ள நகைக்கடைக்கு கொண்டுசென்ற 67 கிலோ தங்க நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. மதுரை விமான நிலையம் அருகே பறக்கும்படை வாகள சோதனையில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் மயங்கிக் கிடந்த காட்டு யானை.
தகவல் அறிந்து வனத்துறையினர் சிகிச்சை அளிக்க விரைந்துள்ளனர்
சென்னை
காசிமேட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கீதா என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை அவர்கள் ஆதரித்து திருவண்ணாமலை முக்கிய நகர வீதிகளில் பொதுமக்களிடம் மற்றும் வியாபாரிகளிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்