திருச்சி மாவட்டம் லால்குடி
திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டையில் உள்ள அதிமுக தேர்தல் அலுவகத்தில் லால்குடி,புள்ளம்பாடி ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி,புள்ளம்பாடி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னால் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான P.தங்கமணி கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் அமைச்சருமான மு.பரஞ்சோதி எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் N.R.சிவபதி,அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராஜ் மற்றும்,லால்குடி, புள்ளம்பாடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.