இலங்கை மீனவர் மாரடைப்பு ஏற்பட்டு
மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இலங்கை மீனவர், காப்பாற்றிய இந்திய படை குவியும் பாராட்டு
நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இலங்கையை சேர்ந்த மீனவர் சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திய கடற்படையினர், மீனவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
நமது இந்திய மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை கைது செய்து வந்தாலும் அதற்கு பழி வாங்காமல் இந்திய கடற்படையின் மனிதாபிமான செயல் பலரையும் பாராட்ட வைத்துள்ளது