விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தும் சாத்தியமானது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும். காங். தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு 50% உச்சவரம்பை உயர்த்துவது விளிம்புநிலை மக்கள் வாழ்வை உயர்த்தும்.காங். தேர்தல் அறிக்கை மக்களை மீட்கும் அறிக்கை;
வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்யும் அறிக்கை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள் இட ஒதுக்கீடு புரட்சிகரமான திட்டம்; மகிழ்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது என்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை நம்பிக்கையளிக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்