வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் 3 துறைகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வுதளம், மின்சார வசதிகள் செய்து தர வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தர வேண்டும்.
15 × 15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும்.
குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கான வசதிகளை செய்து தரவேண்டும்.
கிராம அலுவலர்களை கொண்டு 200மீ. எல்லைக் கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்பு அமைத்தல் பணிகளை செய்து தர வேண்டும்