இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து உள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.
