கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் நேற்று (ஏப்ரல் – 6) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். இந்நிலையில், அன்று இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.