வெயிலில் கூந்தல் வாடாமல் இருக்க நெல்லிக்காய் ஹேர் மாஸ்க் ரெசிபி..
முடி பராமரிப்பில் ஆயுர்வேதம் நெல்லிக்காய் பரிந்துரைக்கிறது. முடி வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நெல்லிக்காய் முடி பராமரிப்பு பொருள்களிலும் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கோடையில் முடியை குளிர்ச்சியாக்க நெல்லிக்காய் ஹேர் மாஸ்க் போடலாம்.
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி (கூந்தல் அளவுக்கேற்ப)
நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலையை ப்ளெண்டரில் மைய அரைத்து பிறகு நெல்லிப்பொடி கலந்து தேவையான அளவு தயிர் சேர்க்கவும். கூந்தல் முழுவதும் தடவி- 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு இலேசான தண்ணீர் மற்றும் ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்