ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டு வெடிப்பு
கர்நாடகா ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதை மறுத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் படித்தவர்கள், வீட்டருகில் இருந்தவர்கள் என பலரிடம், குற்றவாளிகள் குறித்து விசாரித்து அறிந்து வருகிறோம். அது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.