பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, “ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்றுடன் (ஏப்ரல் 5) முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்தது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 6) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல்12ஆம் தேதிவரை சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியினை ஆசியர்கள் மேற்கொள்ளலாம்.
தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை உள்ள காரணத்தினால் 4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மீண்டும் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வுகள் எழுதுவார்கள்.