பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
கடலூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான் மாதத்தில் வேப்பூர் ஆட்டு சந்தை களையிழந்து காணப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வேப்பூர் ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுவதால் வியாபாரிகள், விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன் முன்னிலையில் பாஜகவினர் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிகொள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் கல்லை எடுத்து பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற ரூ.5.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீல் கடை உரிமையாளர் மணி (40) என்பவரிடம் ரூ.5.75 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பகுதிகளுக்கு அங்குள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எடையூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள டேங்க் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் புதுதெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது
நீலகிரி
கோடை சீசனை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களும் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, கோட்டைபட்டினம் மீனவ வாக்காளர்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
கோவை
பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க, வனத்தில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்
கரூர் குளித்தலை கடம்பர் கோயில் எதிரே தென்கரை வாய்க்கால் கடந்து செல்லும் வகையில் தென்கரை வாய்க்காலில் பாலம் உள்ளது. இந் கடம்பர் கோயிலில் எதிரே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. சரிவர செய்யாததால் மண்மேடுகள் அரித்துக் கொண்டு ஒத்தையடி பாதையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி 2024 தேர்தல் பணிக்காக சேத்துப்பட்டு நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்த கழக மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் எ.வ.வே கம்பன் அவர்களை நகர கழக செயலாளர் இரா.முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்