கடலூர் மக்களவை தொகுதி ஒரு பார்வை
கடலூர் மக்களவை தொகுதி ஒரு பார்வை
காங்கிரஸ் கோட்டையான கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று பெயரை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தொகுதி மக்களின் கோரிக்கை, எதிர்பார்ப்பு, யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது கடலூர் மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் ஆண்கள்- 8,78,192, பெண்கள்- 8,66,329 என மொத்த மக்கள்தொகை – 17,44,521 ஆக உள்ளது. இதில் 13,42,320 ஆண் வாக்காளர்களும், 6,64,313 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 6,77,928 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆண்கள் – 85.94%, பெண்கள் – 70.14% பேர் உள்ளனர். இந்துக்கள் – 89.12% ,முஸ்லிம்கள்- 6.9%, கிறிஸ்துவர்கள் – 3.98% பேர் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளி கடற்கரை உள்ளது. அதுமட்டுமில்லாமல் வடலூர் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், பாடலீஸ்வரர் கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில், வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளிட்ட ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது அவர்கள் கட்டிய புனித டேவிட் கோட்டை இங்குள்ளது. இந்த தொகுதியில்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அரசியல் களத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் இங்கிருந்துதான் தொடங்கியது.
பொருளாதாரத்தின் நிலை:
கடலூரில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. பலாப்பழத்திற்கு புகழ்பெற்ற பண்ருட்டி நகரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இங்குதான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் விருதாச்சலம் பீங்கான் தொழிற்சாலை, கடலூர் சிப்காட், தனியார் சர்க்கரை ஆலைகள், முந்திரி ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் நெல் கரும்பு, முந்திரி, மிளகாய், சாமந்தி, பலா உள்ளிட்ட அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
தீர்க்கப்படாத பிரச்னைகள்:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவான நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கம் அனல்மின் நிலையம் தவிர வேறு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. திட்டக்குடி தொகுதியில் வெலிங்டன் நீர்தேக்கம் தூர்வாரப்படாமல் உள்ளது. பண்ருட்டியை தலைமையிடமாக கொண்டு முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்பு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை திறக்கப்படுவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. கடலூரில் இருந்து சென்னைக்கு நீர்வழி பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் கிடப்பில் உள்ளது. நெய்வேலியில் சிறு விமான நிலையம் அமைக்கும் பணி தொடக்க நிலையிலேயே உள்ளது. தனியார் கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை பெற்றுத் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கை:
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும், என்எல்சி நிறுவனத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும், மத்திய அரசின் அம்ருட் திட்டத்தின் கீழ் கம்மியம் பேட்டை குப்பைக்கிடங்கு அகற்றப்பட வேண்டும், கடலூர் முதல் தஞ்சாவூர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கப்பட வேண்டும், திருவந்திபுரம் சுற்றுலா தளமாக ஆக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கடலூரில் புராதான சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அரசு மருத்துவ கல்லூரி நிறுவப்பட வேண்டும், என்எல்சியில் மூன்றாம் சுரங்க விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை கடலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்:
அதிமுகவும், திமுகவும் கடலூரில் சமபலத்துடன் உள்ளனர். கடலூரை பொருத்தமட்டில் வன்னிய சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் சம அளவில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முதலியார், யாதவர், செட்டியார், பிள்ளைமார்கள், ரெட்டியார் உள்ளிட்டோர் கணிசமான அளவில் உள்ளனர்
கடலூர் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 8 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2014இல் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார்.
2019இல் ரமேஷ் திமுகவில் வெற்றி பெற்றார்.
தற்போது
ஆங்கிரஸில் விஷ்ணு பி.சாத்,
பாமகவில் இயக்குநர் தங்கர்பச்சான்,
தேமுதிகவில் சிவக்கொழுந்து போட்டியில் உள்ளனர்.