இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
❇️✅தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலநாதர் ஆலய சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
❇️✅சேலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இருசக்கர பேரணி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
❇️✅கோவையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி திருநங்கைகள் வரைந்த விழிப்புணர்வு கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் சென்று பார்வையிட்டார்
❇️✅நாமக்கல் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடந்தது.
❇️✅திருவண்ணாமலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர் பேரணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
❇️✅தர்மபுரியில் மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்
❇️✅மதுரையில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகளை பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
❇️✅நீலகிரி
முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆண் யானைக்கு, வனத்துறை மருத்துவ குழுவினர், சிகிச்சை அளித்த நிலையில், உடல்நலம் தேறி வனப்பகுதிக்குள் சென்றது.
❇️✅திருச்சியில் பள்ளிவாசல் ஒன்றில் வாக்கு கேட்டு வந்த அதிமுக வேட்பாளரை இஸ்லாமியர்கள் விரட்டியடித்தனர!
CAA போன்ற முஸ்லிம் விரோத சட்டங்களை ஆதரித்து முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டு எப்படி வெட்கமின்றி ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என கேள்வி!
❇️✅திருப்பூர் தேர்தல் அதிகாரிகள் திருப்பூர் காங்கேயம் சாலை அருகே உள்ள செவந்தம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூ 1.02.600 பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
❇️✅திருப்பத்தூர் முத்தனபள்ளி பகுதியில் 10 வருடங்களாக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
வட்டாட்சியர் சம்பத் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்
❇️✅ராணிப்பேட்டை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரக்கோணம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் கந்திர்பாவை மாரடைப்பால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
❇️✅ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகளைக் கண்டதும் கடலில் வீசப்பட்ட5 கிலோ தங்க கட்டிகள்… ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் கடலுக்குள் இருந்து பறிமுதல்!
❇️✅நெல்லை என்.ஜி.ஓ காலனியில், நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.
பொன்னாக்குடி பகுதியில் உள்ள ஆர்.எஸ்.முருகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் சோதனை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பண உதவி எதுவும் செய்யப்படுகிறதா என்ற அடிப்படையில் சோதனை என தகவல்
❇️✅கடலூர் சிதம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ்., திமுகவினர் இடையே வாக்குவாதம்.
அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ். தரப்பு துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக புகார் – எதிர்ப்பு.
சிதம்பரம் காவல் நிலையத்தில் கூடிய திமுக, விசிக, பாஜகவினர் காவல் நிலையம் முன்பு திமுக மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
❇️✅மதுரை ரம்ஜானை முன்னிட்டு மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு மேலாக ஆடுகள் விற்பனை. வியாபாரிகள் மகிழ்ச்சி