‘இந்தியன் 2’  திரைப்படத்தின் அப்டேட்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ராகுல் பிரீத் சிங்,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தியன் -2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.  படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில்,  இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.