பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து: கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்
பெங்களூரு ஆர்.டி. நகரில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் கட்டடத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வணிக வளாகத்தின் தரை தளத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்து ஏற்பட்ட தீ கட்டடத்திற்கு பரவியது. 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.