திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி நட்சத்திர கோயில் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்திய வரைபடம் சுற்றி அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகைகள் ஏந்தி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.