வீரர் அர்ஜுன் எரிகேசி முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி முன்னேறியுள்ளார்.
செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அர்ஜுன் எரிகேசி முதலிடம் பிடித்துள்ளார். ஃபிடே வெளியிட்ட லைவ் ரேட்டிங் அடிப்படையிலான பட்டியலில் 2 ஆயிரத்து 756 புள்ளிகள் பெற்று அர்ஜுன் எரிகேசி இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.