யுஜி-க்யூட் 2024

யுஜி-க்யூட் 2024: விண்ணப்பிக்க ஏப்.5 வரை கால நீட்டிப்பு.

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு (யுஜி-க்யூட்) விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.

மத்திய, மாநில, தனியாா் பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கைக்காக ‘க்யூட்’ தோ்வு கடந்த 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு மே 15 முதல் மே 31 வரை நடைபெறுகிறது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மாா்ச் 26-இல் இருந்து மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலஅவகாசம் மீண்டும் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து என்டிஏ மூத்த இயக்குநா் (தோ்வுகள்) சாதனா பிரசாா் கூறுகையில், ‘மாணவா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில், யுஜி-க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி இரவு 9.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தோ்வு எழுதும் மாணவா்கள் அடையாளத்துக்காகத் தங்களது பள்ளி அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றாா்.

நிகழாண்டு தோ்வில் கணினி வழியிலான தோ்வு மற்றும் எழுத்துத் தோ்வு என இரு முறைகளில் பல பாடங்களுக்கு தோ்வு நடைபெற உள்ளது.

அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் பெறப்பட்ட பாடங்களுக்கு ஓஎம்ஆா் தாளைப் பயன்படுத்தி தோ்வு நடைபெறும்.

பிற பாடங்களுக்கு கணினி வழியில் தோ்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்

Leave a Reply

Your email address will not be published.