முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு
பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தயவால்தான் அதிமுக சட்டமன்ற வெற்றிபெற்றது. அதிமுக குறித்து விரக்தியில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாக செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு பா.ம.க. உயிர்கொடுத்ததாக கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி.
“பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை”
பா.ம.க.வில் சௌமியா அன்புமணி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை என்றார்.