மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் ஜிஎஸ்டி வரி
கடந்த மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகும்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மார்ச் மாதம் வசூலான ரூ. 1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டியில்,
சிஜிஎஸ்டி – ரூ. 34,532 கோடி,எஸ்ஜிஎஸ்டி – ரூ.43,746 கோடி,ஐஜிஎஸ்டி – ரூ. 87,947 கோடி, ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 40,322 கோடி அடங்கும்)
செஸ் – ரூ.12,259 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.792 கோடி அடங்கும்) ஆகியவை வசூலாகி உள்ளது.
இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகும்.
அதேநேரத்தில் கடந்தாண்டு (2023) மார்ச் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 11 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது