தேர்தல் பத்திர முறைகேடு, சிஏஜி அறிக்கை
தேர்தல் பத்திர முறைகேடு, சிஏஜி அறிக்கை உள்ளிட்டவற்றை திசை திருப்பவே கச்சத்தீவு விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாக திமுக எம்.பி தயாநிதிமாறன் குற்றசாட்டியுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தயாநிதி மாறன் புரசைவாக்கத்தில் திறந்தவெளி வாகன பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு தொண்டர்கள் தாரை தப்படையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரும் மோடி சென்னை வெள்ளத்தின் போது வராத ஏன்? என கேள்வி எழுப்பினார். வெள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி கொடுக்காதது ஏன் என்றும் அவர் வினவினார். தேர்தல் பத்திரம் முறையீடு, சிஏஜி அறிக்கை உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே பாஜக கச்ச தீவு குறித்து பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.