உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை
விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை
சிபிஐ, ஐடி உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் சோதனைகள், தேவையின்றி தனிப்பட்ட சாதனங்களைப் பறிமுதல் செய்தல் போன்ற சம்பவங்கள், விசாரணை அமைப்புகளுக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையே நடுநிலைத்தன்மை அவசியம் என்பதை உணர்த்துகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
புதிய குற்றவியல் சட்டங்களில், நீதிமன்றங்களுக்கும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் சான்றுகள் உட்படத் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைப் பெறுவதற்கான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 94 மற்றும் பிரிவு 185 பற்றி நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.