சர்க்கரை வள்ளி கிழங்கில் ஒளிந்திருக்கும் அற்புத
சர்க்கரை வள்ளி கிழங்கில் ஒளிந்திருக்கும் அற்புத ஊட்டச்சத்துக்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். மேலும் இதில் தேவையான அளவு வைட்டமின் ‘சி’யும் உள்ளது. இதில் பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும் இது இதய நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது. இது இரத்த அணுக்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்க மிகவும் உதவுகிறது.