இந்திய ரயில்வேயின் திருட்டுத்தனம்
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் மூலம்…
ஏழை & நடுத்தர மக்களிடம் இருந்து…
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்…
1230 கோடி ரூபாயை நயவஞ்சகமாக கொள்ளையடித்த
இந்திய ரயில்வேயின் திருட்டுத்தனம்…
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது.
.
அதாவது…
இந்திய ரயில்வே…. 2021 முதல் 2024 (ஜனவரி) வரை… ரத்து செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் மூலம் ₹1,229.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
இதை எப்படி ரயில்வே செய்துள்ளனர் என்றால்….
இருக்கின்ற இருக்கைகளை தாண்டி… மிக மிக மிக அதிகமாக வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை வழங்க வேண்டியது. நிச்சயமாக… அவை கன்ஃபார்ம் ஆகாமல் கேன்சல் ஆகும் என்பது ரயில்வேக்கு நன்றாக தெரியும். அப்படி கேன்சல் ஆகும்போது… முழு டிக்கெட் பணத்தையும் தராமல் கேன்சலேஷன் சார்ஜ் மாற்றும் சேவை கட்டணம்… எல்லாம் பிடித்துக்கொண்டு மிச்சம் தருவதன் மூலம் ரெயில்வேக்கு… 1230 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமுக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த RTI விண்ணப்பத்திற்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், இந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சலேசன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
2021 ல், 2.53 கோடியாக இருந்த இத்தகைய ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை…
2023 ல், 5.26 கோடியாக இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்று RTI பதிலளித்துள்ளது.
அதாவது…
ரயில்களையும் அதிகரிக்காமல்…
பெட்டிகளையும் அதிகரிக்காமல்…
சீட்டுகளையும் அதிகரிக்காமல்…
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்களை மட்டுமே இரட்டிப்பாக அதிகரித்து இவ்வளவு பெரிய தொகையை ரயில்வே பெற்றுள்ளது…. என்பதைவிட திட்டம்போட்டு திருடியுள்ளது என்றே கூற முடியும்.
உதாரணமாக,
2021 ல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, ரயில்வேக்கு ₹242.68 கோடி கிடைத்தது.
2022 ல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 4.6 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, ரயில்வேக்கு ₹439.16 கோடி கிடைத்தது.
2023 ல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 5.26 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, ரயில்வேக்கு ₹505 கோடி கிடைத்தது.
2024 ல், ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரயில்வேக்கு ₹43 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது நாடு தழுவிய பண்டிகைகள் ஏதும் இல்லாத மாதம். இதுவே… தீபாவளி மாதம் என்றால்… ரயில்வே அடிக்கின்ற கொள்ளை வசூல் டபுளாக எகிறுகிறது.
RAC/காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், ஒரு பயணிக்கு ₹60 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் வாங்கும் இ-டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்பட்டால் திருப்பிச் செலுத்தப்படாத சேவைக் கட்டணத்தையும் ரயில்வே பிடுங்கிக்கொள்கின்றது.
நெட் பேங்கிங் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால்…
ஏசி வகுப்புகளுக்கு சேவை கட்டணம் ₹30
UPI மூலம் முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ₹20.
ஏசி அல்லாத வகுப்புகளுக்கு,
ஒரு டிக்கெட்டுக்கு ₹15 (நெட் பேங்கிங் அல்லது கார்டு)
UPI மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கு ₹10
என்று வசூலிக்கப்பட்ட மேற்படி சேவை கட்டணங்கள்…
டிக்கெட் கேன்சல் செய்கிற பயணிக்கு திருப்பி அளிக்கப்படுவது இல்லை.
ஆக மொத்தம்… ஒரு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் மூலம்… ரெயில்வேக்கு சராசரியாக சுமார் 60₹ முதல் 90 ₹ வரை கிடைக்கிறது.
ஒரு ரயிலில் 1000.சீட்டு இருந்தால்…
1000 கன்ஃபார்ம் டிக்கெட் கொடுத்துவிட்டு…
600 வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொடுத்தால்…
எப்படியும்… 100க்கு மேலே கேன்சல் ஆகாது என்பதால்…
500 டிக்கெட் கேன்சல் ஆகும்போது…(500×80=) 40,000₹
பயணிகள் தரும் கட்டணம் தாண்டி…
கூடுதலாக ரயில்வேக்கு கிடைத்து விடுகிறது.