கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி
ஜப்பானின் ஒசாகாவை சேர்ந்த கொபாயாஷி பார்மசூட்டிக்கல் நிறுவனம் ஊட்டச்சத்து மாத்திரைகளை அறிமுகப்படுத்தியது. உடலில் கொழுப்பு சத்தை குறைக்க உதவும் மருந்துகளை சாப்பிட்ட பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஒரு வாடிக்கையாளர் சிறுநீரகப் பிரச்னைக்கு ஆளானதாக புகார் அளித்தார். இதை தொடர்ந்து ‘பெனி கோஜி’ உள்ளிட்ட 3 ஊட்டச்சத்து மருந்துகள் விற்பனையை கொபாயாஷி நிறுத்தியது. ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.