குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்
தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது:
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆகிய ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் :இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி : 96 வயதாகும் எல்.கே.அத்வானி, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்.ஸில் தீவிரமாக பணியாற்றிய எல்.கே.அத்வானி, பாஜகவை நிறுவிய தலைவர்களுள் ஒருவர். 1990-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார்.