செல்வ பெருந்தகை காங்கிரஸ் தலைவர்
இயேசு தன்னுடைய தேவாலயத்தில் தவறு செய்தவர்களை எல்லாம் சாட்டை எடுத்து விரட்டி அடித்ததுபோல, இந்தியா கூட்டணி தலைவர்கள் சாட்டையை கையில் எடுத்துள்ளார்கள்:
இன்று புனித வெள்ளி, இயேசு தன்னுடைய தேவாலயத்தில் தவறு செய்தவர்களை எல்லாம் சாட்டை எடுத்து விரட்டி அடித்தார் என்று சொல்வார்கள், தற்போது அதேபோன்று தான் இந்தியா கூட்டணி தலைவர்கள் சாட்டையை கையில் எடுத்துள்ளார்கள்.தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி என்ற ஒரு வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டணி தான் இந்திய தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. 2019ம் ஆண்டை காட்டிலும், இந்த முறை 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார்