கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய கனிமொழி;
தேர்தலில் போட்டி திமுக-அதிமுக இடையேதான்.
பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜக ஏற்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. மோடி அரசு, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் வஞ்சித்து வருகிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மணிப்பூர் சம்பவமே உதாரணம். ஜிஎஸ்டி வந்த பிறகு 25 சதவீதம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.