திருமாவளவன் சமர்பித்துள்ள

திருமாளவன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் திருமாவளவன் சமர்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்துக்கள் விவரங்கள் இடம் பெற்றுள்ளன

அதன் விவரம் வருமாறு:-
திருமாவளவன் கையிருப்பில் ரொக்கமாக ரூ. 10,000 ரூபாய் உள்ளது. நான்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில், அண்ணா சாலையிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள கணக்கில் ஜிரோ பேலன்ஸ் உள்ளது.

அசோக் நகரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் 13,947 ரூபாய் உள்ளது. டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.3,22,595 ரூபாய் உள்ளது. அரியலூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.10,00,000 உள்ளது. தேர்தல் செலவுக்காக இந்த தொகை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், எஸ்பிஐ மியூட்சுவல் பண்டில் ரூ.74.58, 925 முதலீடு செய்து இருப்பதாகவும் திருமாவளவனின் வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. 32 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எண்டவர் கார் உள்பட மொத்தம் 4 வாகனங்கள் உள்ளன.

அதாவது, டெம்போ டிராவலர், இரண்டு டாடா சபாரி கார்கள், போர்டு எண்ட்ரோவர், ஹூண்டாய் க்ரேட்டா உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. மியூச்சுவல் பண்ட், இன்ஸூரன்ஸ் என அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 2,07,97,903 ரூபாயாக உள்ளது.

வேளாண் நிலங்கள் எதுவுமில்லை. சொந்த ஊரான அங்கனூரில் 25 செண்ட் மதிப்புள்ள குடியிருப்பு மனை உள்ளது. தாயார் பெரியம்மா பெயரில் 26 செண்ட் காலி மனை உள்ளது எனவும் திருமாவளவனின் வேட்பு மனுவில் கூறபட்டுள்ளது. திருமாவளவனின் அசையா சொத்துக்களின் (பூர்வீகம்) மொத்த மதிப்பு 28,62, 500 ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.