ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டயத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்திய பெண் பயணியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் சுங்கத்துறை அடைத்தது.