மு.க.ஸ்டாலின், ராகுல் இணைந்து பிரசாரம்
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் இணைந்து பிரசாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., எஸ்.டி. துணை திட்டம் புதுப்பிக்கப்படும், எஸ்.சி., எஸ்.டி.க்கான பட்ஜெட் அறிவிக்கப்படும், மக்கள் தொகை அளவை கணக்கில் கொண்டு பட்ஜெட் தயாராகும். வனச்சட்டத்தை திருத்தம் செய்து பழங்குடியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து பழங்குடியினருக்கு எதிரான சட்டங்களும் திரும்பப் பெறப்படும். திருச்சியில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன். ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை? தென் சென்னையில் பிறந்த ஜெய்சங்கரை ஏன் தென் சென்னையில் நிறுத்தவில்லை? ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதியா?.