மரவள்ளி கிழங்கு அடை செய்முறை

தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 300 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ காய்ந்த மிளகாய் – 7 சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் முழு பூண்டு – 1 வெங்காயம் – 2 கருவேப்பிலை – 2 இனுக்கு கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் இட்லி அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு இவற்றையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கில் இருக்கக்கூடிய தோல்களை நீக்கி கேரட் உரசுவது போல் உரசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து முதலில் கொரகொரப்பாக அளித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி, துவரம்பருப்பு, சோம்பு இவற்றை சேர்த்து அரைத்து இதனுடன் மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த விழுதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். இப்பொழுது இதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தபட்சம் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை மூடி வைத்து விட வேண்டும். பிறகு நாம் எப்போதும் அடை சுடுவது போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெயை ஊற்றி அதற்குள் மெல்லியதாக இல்லாமலும் கனமாகவும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவு தடிமனுடன் மாவை ஊற்றி வேகவிட வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபடியும் அடையை திருப்பிப் போட்டு லேசாக எண்ணெய் ஊற்றி மறுபுறம் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான மரவள்ளி கிழங்கு அடை தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே: உடல் வலிகளை நீக்கும் முடக்கத்தான் ரசம் மரவள்ளி கிழங்கில் சிப்ஸ் செய்து தந்தால் மட்டுமே தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சிப்ஸ் செய்வதற்கு பதிலாக இந்த வகையில் அடையாக செய்து கொடுப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் எந்தவித யோசனையும் இல்லாமல் சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.