குரூப்-1 தேர்வு : ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணிகளில் அடங்கிய துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, உதவி ஆணையர் வணிக வரிகள் 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் 21, உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒரு பணியிடம், மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஒரு பணியிடம் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.