ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்
ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சித்துள்ளதால் பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.