அமெரிக்கா கருத்து!
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்:
ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சித்துள்ளதால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறுகையில்; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும். நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்த விவகாரங்கள் அனைத்திலும் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனா, கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்திருந்தார். இதே போல்,’நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்’ என்று ஜெர்மனியும் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு குளோரியாவை வரவழைத்து இந்தியா நேற்று எதிர்ப்பு தெரிவித்தது.