அண்ணாமலையின் சொத்து மதிப்பு
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு ரூ.1.48 கோடியாக உள்ளது.
அண்ணாமலையின் அசையும் சொத்து ரூ.36 லட்சம், அசையா சொத்து மதிப்பு ரூ.1.12 கோடியாக உள்ளது. அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.2.03 கோடி அசையும் சொத்து, ரூ.53 லட்சம் மதிப்பு அசையா சொத்துகள் உள்ளன. அண்ணாமலை ரூ.5 லட்சம் மதிப்பிலான ஹோண்டா சிட்டி கார் வைத்துள்ளார்.
அண்ணாமலை மீது 24 வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.