வடக்கஞ்சேரி அருகே காங்கிரஸ் வேட்பாளரின் பிளக்ஸ் பேனர் எரிப்பு

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை அருகே காங்கிரஸ் வேட்பாளரின் பிளக்ஸ் பேனரை சமூகவிரோதிகள் எரித்து நாசப்படுத்தினர். கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.26ம் தேதி இரண்டு கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நடக்கிறது. இதில், ஆலத்தூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் இரண்டாவது முறை போட்டியிடுகிறார்.

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை அடுத்த கிழக்கஞ்சேரி குண்டுக்காடு சென்டரல் பகுதியில் வங்கி கட்டடம் அருகே காங்கிரஸ் கொடிமரத்தின் கீழ் பகுதியில் ஆலத்தூர் நாடாளுமன்ற தொகுதி ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸின் கை சின்னம் கொண்ட, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.இதை சில சமூக விரோதிகள் எரித்து நாசப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.